×

கொடைக்கானல் வனப்பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் ஆர்ப்பரித்து கொட்டும் மூலையாறு அருவி: பயணிகள் குதூகலம்..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக கொட்டும் மூலையாறு அருவியை கண்டு வத்தலகுண்டு சாலையில் செல்லும் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ளது மூலையாறு அருவி. பசுமை போர்த்திய வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. இதனால் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அருவி கொட்டுகிறது. பசுமையான மரம், செடி, கொடிகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் இந்த அருவியை வத்தலகுண்டு சாலையில் செல்லும் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதேபோல் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக பாம்பாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாம்பாற்றில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 மதகுகள் கொண்ட அணையில் 2 மதகுகள் வழியாக வரும் நீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர். இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kodaikanal Forest, Mulayaru Waterfall, Travelers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி