பரமக்குடியில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநில சப்ஜூனியர் போட்டி: மதுரை மண்டல அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மதுரை மண்டல சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இத்தொடரில் மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியை மாநில கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளை வாழ்த்தினார். 3 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் சிறப்பிடம் பிடிக்கும் அணிகள், மாநில சாம்பியன் போட்டிகளுக்கு முன்னேறும்.

இதேபோன்று 3 மண்டலங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாநில கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ஆதவ் அர்ஜுனா பேசிய போது, ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு 16 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டி, மதுரை குழுவினருடன் நடைபெற்று வருகிறது. இதில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் விளையாட உள்ளனர். மேலும் ஒவ்வொரு குழுவிலும் 9 ஆண்கள் அணி, 9 பெண்கள் அணி என பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தரமான இருப்பிடம் மற்றும் சத்தான உணவு வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.  

Related Stories: