×

பிரேசிலில் குடிசைப் பகுதியில் புகுந்து போலீஸ் துப்பாக்கிசூடு: சிட்டுக்குருவிகளை சுடுவதுபோல் 18 இளைஞர்கள் சுட்டுக்கொலை..!!

ரியோ - டி - ஜெனிரோ: பிரேசில் நாட்டில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 18 நபர்களை சிட்டுக்குருவிகளை சுடுவதை போல போலீசார் சுட்டுத் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் முக்கிய நகரமான ரியோ - டி - ஜெனிரோவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் புகுந்து ராணுவம் மற்றும் போலீசார் அங்கு கண்ணில்பட்ட இளைஞர்களை சுட தொடங்கினர். இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு உடலில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளனர். பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களில் கொள்ளையடித்தது மற்றும் கடைகளில் கொள்ளையடித்தவர்களை கைது செய்ய போலீசார் மற்றும் ராணுவத்தினர் அந்த குடிசைப் பகுதியில் புகுந்தனர்.

ஆனால் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக் கொன்ற சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் கில்பெர்டோ தெரிவித்ததாவது, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போலீசார் உதவவில்லை. அவர்கள் உதவவும் மாட்டார்கள். தண்ணீர் கொண்டு செல்லும் வண்டிகளிலும், பின்னர் வேன்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என கூறினார். கடந்த ஆண்டு இதே குடிசை பகுதிக்குள் புகுந்த போலீசார், 28 பேரை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்டவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது குற்றச்சாட்டாகும். கடந்த மே மாதம் 25ம் தேதி ரியோ - டி - ஜெனிரோவில் உள்ள விலா குரைஸோரோ என்ற இடத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 25 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 25ம் தேதி பாராடா ஜீஸுகா என்ற குடிசை பகுதியில் நகை கடை கொள்ளை முயற்சியை தடுக்க முயன்ற போலீசார், 28 பேரை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Brazil , Brazil, police, gunfire, youth, shooting
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...