கஞ்சா விற்ற ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து, சோதனை செய்தபோது, அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் வியாசர்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த அருண்குமார் (26) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: