திருவள்ளூரில் மாணவியை கர்ப்பிணியாக்கிய மாஜி மாணவர்கள் மீது புகார்

திருவள்ளூர்:  திருவள்ளூரை சேர்ந்தவர் ஜனனி (15, பெயர் மாற்றம்). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஜனனியிடம் நட்பாக பேசி வந்துள்ளனர். அவரை பலாத்காரம் செய்ய 2 மாணவர்களும் முடிவு செய்தனர். 2 மாணவர்களில் ஒரு மாணவனின் வீடு வேப்பம்பட்டில் உள்ளது. அங்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த ஜனவரி 23ம் தேதி, 2 மாணவர்களும் ஜனனியிடம் நைசாக பேசி திருவள்ளூரில் ரயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மின்சார ரயில் மூலம் வேப்பம்பட்டில் உள்ள மாணவனின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு, 2 மாணவர்களும், ஜனனியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் ஜனனி அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். பின்னர் ஜனனியை மீண்டும் மின்சார ரயிலில் அழைத்து வந்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விட்டு விட்டு 2 மாணவர்களும் நைசாக சென்று விட்டனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜனனிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை ஜனனி கூறி அழுதார். உடனே டாக்டரிடம் அழைத்து சென்று பரிசோதித்தனர். ஜனனி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: