மாதர்பாக்கம் கிராமத்தில் வரும் 27ம் தேதி மக்கள் தொடர்பு திட்டம் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், மாதர்பாக்கம்; கிராமத்தில் வருகிற 27 ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ், தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது. அதுசமயம், அனைத்துத் துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறு  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Related Stories: