×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறை பிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவு தனுஷ்கோடி அருகே மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். மேலும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் ஜார்ஜ், அர்ச்சுனன், அஜித்குமார், கிறிஸ்டோபர், லிங்கம் மற்றும் நாகசாமி ஆகிய 6 மீனவர்களை சிறை பிடித்தனர். அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் இரவோடு இரவாக தலைமன்னார் துறைமுகத்திற்கு, இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். அங்கு உயரதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Sri Lankan Navy ,Rameswaram , Sri Lankan Navy again atrocity Rameswaram fishermen 6 arrested
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!