பொய் செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: எஸ்பி பகலவன் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. தனியார் பள்ளி மாணவி இறந்ததால், மாணவியின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவிவருகிறது. விசாரணையில் இந்த வீடியோ, நாகை மாவட்டம்  திருக்கண்ணபுரம், பெருநாட்டான்தோப்பு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட வேலி பிரச்னை காரணமாக கடந்த 14ம் தேதி நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி மாணவி ஸ்ரீமதியின்  தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய் செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பி வருகின்றனர். இதுபோன்று சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Related Stories: