×

காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நேற்று துவங்கியது. வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் வழியாக ஓடும் மழைநீர் கால்வாய் மஞ்சள் நீர்க் கால்வாய். இந்த கால்வாய் தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பகுதி, ரயில்வே சாலை மற்றும் திருக்காலிமேடு பகுதி வழியாகச் சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாயில் சாயப்பட்டறை கழிவுகள், அரிசி ஆலை கழிவுகள், பொதுமக்கள் சிலரின் வீட்டில் இருந்து செல்லும் குப்பைகள், கழிவுகள் விடப்படுகின்றன.

இதனால், பொதுமக்கள் சுகாதாரம் சார்ந்து பெரிதும் பாதிக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் வந்த சட்டப்பேரவை மதீப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வுக்கு பின் மஞ்சள் நீர் கால்வாய் புனரமைக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பாலாஜி தெரு அருகே காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் மஞ்சள் நீர் கால்வாய் தூர் வாரும் பணி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், நகராட்சி கமிஷனர் கண்ணன், உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், மாமன்ற உறுப்பினர் கௌதமி திருமாதாசன், திமுக பிரமுகர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Yellow Water Canal ,Kancheepuram , Kanchipuram, Yellow water canal, dredging work
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...