×

தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில்வே யூனியன் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்: தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில்வே யூனியன் சார்பில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பணியாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்ட, செங்கல்பட்டு - அரக்கோணம் இடையிலான இருப்புப் பாதையில் ஏற்கனவே 14 ரயில்வே கேட்டுகள் இருந்த நிலையில், கூடுதலாக 12 புதிய ரயில்வே கேட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு பணியாளர்களாக உள்ள கேங்மேன்களையே, புதிதாக உருவாக்கிய ரயில்வே கேட்டிற்கும் கேட்மேன்களாக பணிபுரிய தெற்கு ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தண்டவாள பராமரிப்பு பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதோடு, வாராந்திர விடுமுறையும், அவசர கால தேவைக்கான விடுமுறையும் எடுக்க முடியாமல் அவதிப்படுவதாகவும், புதியதாக உருவாக்கிய 12 ரயில்வே கேட்டிற்கும் பணியிடங்களை உருவாக்காமல் காலம் தாழ்த்தி வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில் நிலையத்தில் உண்ணாவிரத போராட்ட நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சதர்ன் ரயில்வே மத்தூர் யூனியன் சார்பில், உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் அப்துல் ஹபீஸ் தலைமை தாங்கினார். வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் துணை செயலாளர் சிலம்பரசன் கலந்துகொண்டு கண்டன சிறப்புரை ஆற்றினார். உண்ணாவிரத போராட்டத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் காஞ்சிபுரம் கிளைத்தலைவர் கிருபாகரன், திண்டிவனம் பகுதி செயலாளர் டி.காமேஷ், மற்றும் நிர்வாகிகளும், 100க்கும் மேற்பட்ட தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு, புதிய பணியிடங்களை உருவாக்காததையும், பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வகையில் செயல்படும் சதன் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு, கண்டன கோஷங்களை எழுப்பி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Railway Union ,Southern Railway , Southern Railway Administration, Railway Union, fast
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...