×

காலிறுதியில் காஷ்யப், தனிஷா

சீன தைபேவில் நடக்கும் தைபே ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று காலிறுதிக்கு  முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்  தனிஷா கரஸ்டோ, ஸ்ருதி மிஸ்ரா இணை , வெறும் 22 நிமிடங்கள் 21-14, 21-8 என  நேர் செட்களில் சீன தைபேவின்  ஜியா யின்  லின், யூ ஹோ லின் இணையை  வீழ்த்தியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகர், தனிஷா  கரஸ்டோ இணை 32நிமிடங்களில்,  சீன தைபேவின் கை வென் செங், யூ கியோ வாங்  இணையை  21-14, 21-17 என நேர் செட்களில் வென்றது. இவர்களுடன் ஆடவர் ஒற்றையர்  பிரிவில் இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப்  36 நிமிடங்களில் சீன தைபே வீரர்  சியா ஹவ் லீயை 21-10, 21-19 என நேர் செட்களில் சாய்த்து காலிறுதிக்கு  முன்னேறினார்.

Tags : Kashyap ,Tanisha , Quarter Finals, Kashyap, Tanisha
× RELATED சில்லி பாயின்ட்…