×

இன்று முதல் வெ.இண்டீசுடன் மோதல் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா

டிரினிடாட்:  தொடர் வெற்றிகளால் தனது ஆதிக்கத்தை  தொடரும் இந்திய அணி,  இன்று  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் களம் காணுகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த 3 ஆட்டங்களும் டிரினிடாட்,  போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ்  பார்க் ஓவல் அரங்கில் நடக்கும். இன்று முதல் ஆட்டத்தில் இந்திய அணி, சமீபத்தில்  இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன்    விளையாட உள்ளது.

ஆனாலும் சொந்த மண்ணில் நடக்கும் இந்த  தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெ.இண்டீஸ்  காத்திருக்கிறது. அதிலும் சில நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் வங்கதேசத்திடம்  இழந்த சோகத்தை மாற்ற வேண்டும்.  அதனால் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை மீண்டும் அணியில்,   என மாற்றங்களுடன் அந்த அணி களமிறங்குகிறது.

 அதே நேரத்தில்  இந்திய அணியில் அனுபவ வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, கோஹ்லி, ஷமி, பும்ரா, ரிஷப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் ஷிகர் தவான் தலைமையிலான  அணியில் இளம் வீரர்களின்  அதிரடிக்கு பஞ்சமில்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, ஆதிக்கத்ததை தொடருமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

நேருக்கு நேர்
இந்த 2 அணிகளும் இதுவரை 136 ஒருநாள் ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அதில் இந்தியா 67, வெ.இண்டீஸ் 63 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. எஞ்சிய 2 ஆட்டங்கள் சரிநிகர் சமனில் முடிய, 4 ஆட்டங்கள்  கைவிடப்பட்டன. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அணி விவரம்
வெஸ்ட் இண்டீஸ்: பூரன்(கேப்டன்),  புரூக்ஸ், பிரண்டன், ரோவ்மன், கேசி, மேயர்ஸ், ஹோல்டர், குடகேஷ், கீமோ,  ஷாய், அகேல், அல்சாரி,  ஜெடன். இந்தியா: தவான்(கேப்டன்), ருதுராஜ், ஷூப்மன், சூரியகுமார், ஸ்ரேயாஸ்,  தீபக், ஜடேஜா,  அக்சர், இஷான், சஞ்சு, ஷர்துல், சாஹல், ஆவேஷ், பிரசித், சிராஜ், அர்ஷ்தீப்.

Tags : India ,West Indies , West Indies, Conflict, India
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...