2022-23ஆம் ஆண்டிற்குரிய செந்தர விலை விவரப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு!

சென்னை: பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 2022-23ஆம் ஆண்டிற்குரிய செந்தர விலை விவரப் பட்டியலை வெளியிட்டுள்ளார். பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டடங்களின் 2022-23 ஆம் ஆண்டுக்கான மதிப்பீடு தயார் செய்வதற்குரிய, கட்டுமானப் பொருட்கள் விலை விபரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தினக்கூலி விவரம் அடங்கிய செந்தர விலை விவர பட்டியலை வெளியிட்டார்.

இதன் சிறப்பு அம்சமாக, கட்டுமானத் துறையில் நவீன தொழில் நுட்பமான முன்வார்க்கப்பட்ட கான்கீரிட் கட்டமைப்புகளை பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கான மதிப்பீடு தயாரிக்க ஏதுவாக விலை விவரம் முதன் முறையாக பொதுப் பணித் துறை செந்தரவிலை விவர பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானங்களுக்கான முழு விலை விவர பட்டியலும் சேர்த்து இவ்வாண்டு வெளியிடப்படுகிறது.

இந்நிகழ்வின் போது, பொதுப் பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., பொதுப் பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திரு. இரா. விஸ்வநாத், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் திரு. பி. ஆர். குமார் மற்றும் துறை சார்ந்த அலுவவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: