திருமணமாகி சில வாரங்களான நிலையில் பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் ‘அட்மிட்’

புதுடெல்லி: திருமணமாகி சில வாரங்கள் ஆன நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான  பகவந்த் மான் மாநில முதல்வராக உள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு  முன் டாக்டர் குர்ப்ரீத் கவுருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் முதல்வர் பகவந்த் மானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்று வலி பிரச்னை இருந்ததால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதனால் அந்த மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக நேற்று அமிர்தசரஸ் அருகே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் மறைந்த பாடகர் சித்து வாலாவின் கொலையில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதை முதல்வர் பகவந்த் மான் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: