அமித்ஷாவுடன் நேற்று சந்திப்பு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை இன்று சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலையில் பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம், கலவரம் தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. திடீரென பாஜ தலைவர் அண்ணாமலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக நேற்று மாலை 4 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து இந்தப் பிரச்னைகள் குறித்து மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: