×

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானை சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் அதிகம் காய்ந்துள்ளது. இதனால், பலா பழங்களை ருசித்து பசியாறுவதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது யானை கூட்டம் இடையூறு செய்து உயிர்பயம் காட்டி வருகிறது. அப்போது, அங்கிருந்து வாகன ஓட்டிகள் மிரண்டு ஓட்டம் பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் ஒற்றை காட்டு யானை ஜாலியாக உலா வந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலை மற்றும் தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை கூட்டங்களை கண்காணித்து வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotagiri , A wild elephant strolling along the Kotagiri road screamed at the tourists
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது