×

மோதல் போக்கால் சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகம் பாதிப்பு: சீன அதிபருடன் பேச ஜோ பைடன் திட்டம்..!

வாஷிங்டன்: தைவான் பிரச்சனை மற்றும் பரஸ்பர வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா சீனா இடையே பிணக்கம் நிலவி வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பைடன்; அடுத்த 10 நாட்களுக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வழியே பேச இருப்பதாக கூறினார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேனியர் உச்சி மாநாட்டிற்கு பிறகு அமெரிக்கா, சீனா நாடுகளின் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலோசி சமீபத்திய தைவான் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய சூழலில் நான்சி பொலோசியின் தைவான் பயணம் தேவையில்லாத ஒன்று என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பைடன் பொலோசியின் பயணத்தால் மாற்றம் ஏதும் ஏற்பட போவதில்லை என்று கூறினார். பொலோசியின் தைவான் பயணம் ஏற்கனவே ஏப்ரலில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பயணம் தள்ளி வைக்கப்பட்டதாகவும் பைடன் குறிப்பிட்டார். தைவானை கைப்பற்ற சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதில் அமெரிக்கா தலையிடும் என்று கடந்த மே மாதம் பைடன் தெரிவித்ததில் இருந்தே அமெரிக்காவுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 10 நாட்களுக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பைடன் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Tags : China ,United States ,Joe Biden , Due to the conflict, trade between China and the United States is affected: Joe Biden plans to talk to the Chinese president..!
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை