அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்..!

டெல்லி: அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங். தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை சம்மனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜம்மு, கேரளா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் காங். கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்; நேஷனல் ஹெரால்டு பற்றிய கனக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நேஷனல் ஹெரால்டு பற்றி வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தை விட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என கூறியுள்ளார்.

Related Stories: