அமலாக்கத்துறை அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது - ப.சிதம்பரம் கருத்து

சென்னை: நேஷனல் ஹரால்டு பற்றிய கணக்கு விபரங்கள் முறையாக வருமான வரித்துறை முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார். அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விபரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நேஷனல் ஹரால்டு பற்றி வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என கூறினார். உச்சநீதிமன்றத்தை விட அமலாக்கத்துறை அதிகாரம் உள்ளதா என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத்துறை அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என அவர் கருத்து தெரிவித்தார். 

Related Stories: