80 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்படும் கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை இடையே ரயில் பாதை: நிதி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய ரயில்வே அமைச்சகம்

கிருஷ்ணகிரி: இரண்டாம் உலகப்போருக்கு பிறகு கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை இடையிலான ரயில் பாதையை சீரமைப்புக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2.45 கோடியை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. கடந்த 1942 -ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது சேதமடைந்த கிருஷ்ணகிரி முதல் ஜோலார்பேட்டை வரையிலான ரயில்வேபாதை பின்னர் சீரமைக்கப்படவில்லை. பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த ரயில் பாதை மட்டும் சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில் நீண்ட இழுப்பறிக்கு பின் 98 கி.மீ நீளமுள்ள கிருஷ்ணகிரி -ஜோலார்பேட்டை ரயில்பாதயை சீரமைக்க முடிவு செய்திருக்கிறது ஒன்றிய அரசு அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ.2.45.கோடியை ஒதுக்கியுள்ளது. பொதுமக்களின் 80 ஆண்டு கால போராட்டம் தனது முயற்சியால் நிறைவேற உள்ளதாக கிருஷ்ணமன்ற தொகுதி நாடாளுமன்ற  உறுப்பினர் செல்லக்குமார் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை இடையே ஏற்கனவே 101 கி.மீட்டராக இருந்த ரயில் பாதை தற்போது 98 கி.மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டது.

இதை குறைக்கும் வழியில் 7. 45 கி.மீட்டர் நீளமுள்ள குகை வழி பாதையின் தொலைவில் 2 கி.மீட்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டத்தின் மதிப்பீடு 1460 கோடியாக குறைக்கப்பட்டிருப்பதாக என்.பி.செல்லக்குமார் கூறியுள்ளார்.இத்திட்டத்தின் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 அல்லது 4 மாதங்களில் நிறைவு பெறும் அதன்பின்னர் ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: