×

கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடிய நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்!!

கொழும்பு: கோத்தபய நாட்டை விட்டு ஓடிய நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், விலைவாசி உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இதற்கு காரணமான அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி அதிபர், பிரதமர் மாளிகைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அதிபர் கோத்தபய, மகிந்த ராஜபக்சே, அமைச்சர்களாக இருந்த சமல், பசில் மற்றும் நமல் ராஜபக்சேக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.நாட்டை விட்டு ஓடி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோத்தபய, இடைக்கால அதிபராக ரணிலை நியமித்து, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகள் பெற்று 9வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ரணில் உடனே பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால், நாடாளுமன்றம் ஒரு வாரம் ஒத்திவக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். ரணிலுக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.புதிய அதிபரான பதவியேற்றுக் கொண்ட ரணில், கோத்தயபயாவின் பதவிக்காலம் முடியும் 2024 நவம்பர் வரை பதவியில் இருப்பார். 1993ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அரசியல் வரலாற்றில் 2வது முறையாக நாடாளுமன்றம் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Ranil Wickramasinghe ,President ,Sri Lanka ,Gothabaya ,Rajapakse , Gotabaya, Sri Lanka, Ranil Wickramasinghe
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்