புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

புழல் : புழல் சிறையிலிருந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பயங்கர அடிதடி மோதல் நடந்தது. இதுதொடர்பாக, இரு தரப்பை சேர்ந்த ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இதில், இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேரும் நேற்று காலை புழல் சிறையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து அவர்களை  வரவேற்றனர்.

Related Stories: