கஞ்சா வியாபாரிகள் கோயம்பேட்டில் சிக்கினர்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.  இதனையடுத்து நேற்று காலை போலீசார் அங்கு மாறு வேடத்தில்  கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கிருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.  அப்போது  அவர்களை போலீசார் விரட்டி சென்று மடிக்கி பிடித்தனர். வைத்திருந்த பையை  சோதனை செய்தனர். அதில், 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 3 பேரையும்  கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கணேசன்(22), சுந்தரம்(22), மாரிசெல்வன்(23) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சா வாங்கி, பேருந்து மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து திருநெல்வேலிக்கு எடுத்து செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: