ஆவடியில் பரபரப்பு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

ஆவடி: மின்தடையை பயன்படுத்தி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி சிஆர்பிஎப் வளாகம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. ஆவடியில் நேற்று  முன்தினம் இரவு மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி, எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்துக்குள் சில மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மெஷினை கடப்பாரையால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். இக்காட்சிகள் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விஜயவாடாவில் உள்ள வங்கியின் கண்காணிப்பு பிரிவுக்கு தெரியவந்தது. தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஏடிஎம் மையத்தில் அலாரம் ஒலித்ததால், கடப்பாரையை போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இப்புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடுகின்றனர்.

Related Stories: