திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கி மொபட் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை தாக்கி அவர் ஓட்டிவந்த மொபட்டை பறித்து தப்பினர்.திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இரு தினங்களுக்கு முன் இரவு பணி முடிந்ததும் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தான் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை கழற்றி மொபட்டில் வைத்து சென்றுள்ளார். திருவள்ளூர் அருகே தண்டலம் கிராமத்தில் வந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், மகாலட்சுமி மறித்து அவரது மொபட்டை பறித்து தப்பினர். இதுகுறித்த மகாலட்சுமி கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: