3வது முறை கர்ப்பமா: கரீனா கபூர் `கலகல’

மும்பை, : நடிகை கரீனா கபூர் 3வது முறை கர்ப்பமானதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் செம காமெடியான பதிலை தெரிவித்துள்ளார்.பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் சயீப் அலிகான், கரீனா கபூர். அவர்களது 2 மகன்கள் தைமூர், ஜஹாங்கீர் அலிகான். தற்போது அவர்கள் இத்தாலியில் விடுமுறை நாட்களை ஜாலியாக  கொண்டாடி வருகின்றனர். கடந்த 2016ல் தைமூர் அலிகான், 2021ல் ஜஹாங்கீர் அலிகான் பிறந்தனர். இந்நிலையில், கரீனா கபூர் 3வது முறை கர்ப்பமானதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த கரீனா கபூர், ‘எனது நண்பர்களே, என் வயிறு மெகா சைஸில் இருப்பதற்கு காரணம் பாஸ்தாவும், ஒயினும்தான். அமைதியாக இருங்கள்.

நான் கர்ப்பமாக இல்லை. என் கணவர் ஏற்கனவே நாட்டின் மக்கள் தொகையில் அதிக பங்களிப்பு செய்துள்ளார்’ என்று செம காமெடியாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சயீப் அலிகான், கரீனா கபூர் இருவரும் தங்கள் நண்பர்களுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தனர். அப்போது கரீனா கபூர் கருப்பு நிற டாப் அணிந்திருந்தார். இதனால் அவருடைய வயிறு பெரிதாக தெரிந்தது. இதையடுத்து அவர் 3வது முறையாக கர்ப்பமானதாக வதந்தி பரவியது.

Related Stories: