×

ரஷ்யாவில் கல்வி பயிலும் வகையில் தமிழகத்தில் 4 இடங்களில் ரஷ்ய கல்வி கண்காட்சி: சென்னையில் 23ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயிலும் வகையில் சென்னை, மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் ரஷ்ய கல்வி கண்காட்சி வரும் 23ம் தேதி முதல் தொடங்குகிறது. ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம், ரஷ்ய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனமான ஸ்டடி அப்ராடு எஜூகேஷனல் கன்சல்டன்ஸ் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ரஷ்ய கல்வி கண்காட்சியை தமிழகத்தில் நடத்துகிறது. அந்த வகையில், 20ம் ஆண்டு ரஷ்ய கல்வி கண்காட்சியை தமிழகத்தில் 4 இடங்களில் நடத்த உள்ளது.

 இதில் ரஷ்ய மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் பங்கேற்கின்றன. அதன்படி, வரும் 23, 24ம் தேதியில் சென்னை ரஷ்யன் கலாச்சார அறிவியல் மையத்திலும், 26ம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலிலும், 28 தேதி மதுரை தி மதுரை ரெசிடென்சி ஓட்டலிலும், 29ம் தேதி  திருச்சி பெமினா ஓட்டலிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சி பற்றிய விவரங்களை 92822 21221, 99401 99883 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், ரஷ்யாவில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தகுதியையும், உரிய சான்றிதழ்களையும் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ண்காட்சியின் போதே உடனடி சேர்க்கையும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதரகத்தின் துணை தூதர் லகுடின் செர்ஜி பேசும்போது, ‘‘கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய - ரஷ்ய உறவு எப்போதும் வலுவாக இருப்பதால், ரஷ்யாவில் அவர்கள் சிறப்பு கவனம் பெறுகிறார்கள். ரஷ்யாவில் உயர்கல்விக்கான செலவு மற்ற இடங்களை ஒப்பிட்டு பார்த்தால் குறைவு. காரணம் ரஷ்ய அரசு அந்த அளவுக்கு அதிக மானியம் வழங்குகிறது’’ என்றார்.

Tags : Russian education fair ,Tamil Nadu ,Russia ,Chennai , Russian education fair at 4 places in Tamil Nadu for education in Russia: 23rd in Chennai
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...