×

சென்னை விமானநிலைய தீயணைப்பு துறைக்கு அதிநவீன படிக்கட்டுகளுடன் கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு, மற்றும் அவசர காலங்களில் விமானங்களில் உள்ள பயணிகளை மீட்பதற்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனம் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த அதிநவீன படிக்கட்டுகளுடன் கூடிய தீயணைப்பு வாகனம், இந்தியாவில் இதுவரை கொல்கத்தா விமான நிலையத்தில் மட்டுமே இருந்தது. தற்போது சென்னை விமானநிலையத்திற்கு முதல் முறையாக வந்திருக்கிறது. அதிநவீன தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் 6x6 என்ற படிக்கட்டுகளுடன் கூடியது. உயரமான இடங்களுக்கும், ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களில் ஏற்படும் தீ ஆபத்து காலங்களில் தீயை அணைப்பது, பயணிகளை பாதுகாப்பாக இந்த வாகனத்திற்கு மாற்றி, படிக்கட்டுகள் மூலம் கீழே இறக்குவதற்கும் வசதிகள் உள்ளன.

மேலும் சிறப்பு வாய்ப்புகளாக தண்ணீர் டேங்க், ஹோம் பேங்க் தீயணைப்பதற்கான ஹோம் என்ற நுரை சேமிப்பு டேங்க் போன்றவைகளும் உள்ளன.மிகப்பெரிய விமானங்களான போயிங் 747, ஏர்பஸ் கி 350 போன்ற விமானங்களிலும் திடீரென அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், இந்த வாகனம் மூலம் உடனடியாக தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாகனம் முதன்முறையாக சென்னை விமானநிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Airport Fire Department , Fire and rescue vehicle with state-of-the-art stairs for Chennai Airport Fire Department
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...