×

பிளஸ் 2 படித்து கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

பொன்னேரி: பிளஸ் 2 வரை படித்துவிட்டு, கடந்த 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி அருகே மீஞ்சூர், பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (65). இவருக்கு மனைவி நளினி, லோகேஸ்வரி, சந்தியா என்ற 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதற்கிடையே பழவேற்காடு, கோட்டை தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக ராஜேந்திரன் கிளினிக் நடத்தி, அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

மேலும், இவர், பிளஸ் 2 வரை மட்டுமே படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்தப் பகுதி மக்களுக்கு தெரியவந்தது. தகவலறிந்த மாவட்ட எஸ்பி கல்யாண் உத்தரவின்பேரில், பொன்னேரி டிஎஸ்பி (பொ) சாரதி மேற்பார்வையில், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் நேற்று முன்தினம் மாலை கிளினிக்கில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு போலி டாக்டருக்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், போலி டாக்டர் ராஜேந்திரனையும் சுற்றிவளைத்துப்பிடித்தனர்.

இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி டாக்டர் ராஜேந்திரனை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Fake Doctor Arrested
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை