உதயகுமாருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கியது ஏன்?..செல்லூர் ராஜூ புது விளக்கம்

மதுரை: அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர் பதவியை, உதயகுமாருக்கு வழங்கியது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி:

எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம். இதனால் தான் அவரை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம். அதிமுக சட்டமன்ற துணைத்தலைவராக இருந்தவரை (ஓபிஎஸ்) நீக்கும்போது, அவர் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உதயகுமாருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்த சமுதாயம் ஏமாறக்கூடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். உதயகுமார் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். பிரிந்து சென்றவர்கள் கட்சிக்கு திரும்பி வர வேண்டும். இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.

Related Stories: