பக்தவச்சலம் அறக்கட்டளையின் பட்டம்மாள் அளகேசன் கல்லூரிக்கு புதிய கட்டிடம்: காணொளி மூலம் நிதி அமைச்சர் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் பக்தவச்சலம் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பட்டம்மாள் அளகேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து பக்தவச்சலம் அறக்கட்டளை தலைவர் வாமனன் வரவேற்புரை நிகழ்த்தி, இந்த கல்லூரியின் முதல் திறப்பு விழாவில், முன்னாள் சட்டமன்ற அவைத்தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார், தற்போது, அவரது மகனான நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கணொளி காட்சி மூலம் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

விழாவில், பங்கேற்ற உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் மாணவ, மாணவியர் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சிறப்பான உயர்கல்வி பயில அறிவுரை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அறக்கட்டளை தலைவர் வாமனன், சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து கல்லூரி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

விழாவில், ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், உத்திரமேரூர் சேர்மன், அறக்கட்டளை கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இறுதியில், முனைவர் ராஜ்குமார் நன்றி உரை கூறினார்.

Related Stories: