×

மூஸ்சேவாலாவை கொன்ற 2 குற்றவாளிகள் சுட்டுக்கொலை: பஞ்சாப்பில் போலீசார் அதிரடி

சண்டிகர்: பாடகர் மூஸ்சேவாலாவை சுட்டுக் கொன்ற 2 குற்றவாளிகளை, பஞ்சாப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் மாநிலம், மான்சா மாவாட்டத்தில் பாடகரும், காங்கிரஸ் பிரமுகரமான சித்து மூஸ்சேவாலா கடந்த மே 29ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அவரை 6 பேர் கொண்ட கும்பல் 2 பிரிவுகளாக செயல்பட்டு கொன்றதாக தெரிய வந்தது. இதில், துப்பாக்கிச்சூடு  நடத்திய ஒரு பிரிவை சேர்ந்த பிரியவ்ரத் பவுஜி, காஷிஷ் மற்றும் அங்கித் சிர்சா ஆகியோரை டெல்லி சிறப்புப்படை போலீசார்  கைது செய்தனர்.

மற்றொரு பிரிவை சேர்ந்த  ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் (எ) மண்ணு குசா உட்பட 3 பேரை போலீசார் தேடி வந்தனர். கடந்த மே 29ம் தேதி மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் கே  கிராமத்தில் மூஸ்சேவாலாவின் சென்று கொண்டிருந்தபோது, ஏகே 47 துப்பாக்கியால் மூஸ்சேவாலாவை குசா சுட்டு கொன்றுள்ளார். இந்த சூழலில், கடந்த ஜூன் 21ம் தேதி மோகா மாவட்டத்தில் உள்ள சமல்சரில் ரூபாவும், குசாவும்  பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சி சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், பக்னா கிராமத்தில் ரூபாவும், குசாவும் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் நேற்று அந்த இடத்தை சுற்றிவளைத்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினர். அப்போது, போலீசார் குசாவும், ரூபாவும்  துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின் முடிவில், ரூபாவும், குசாவையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

Tags : Moosewala ,Punjab , Moosewala, Shooting, Punjab,
× RELATED மனைவியை விவாகரத்து செய்யாமல்...