×

9 மாநிலங்களில் பாதிப்பு அதிகம் தனிமைப்படுத்தியவர்களை கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு  அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி  புதிதாக 20 ஆயிரத்து 557 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 40 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதை கட்டுப்படுவதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்றிய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தொற்று பாதிப்பால் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் சமூகத்துடன் ஒன்றியிணையாமல் இருப்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Tags : Union , Corona Virus, Health Department, Union Govt
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...