300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி, 1000 தோட்டாக்கள் பறிமுதல் விவகாரம் சென்னை உள்பட 24 இடங்களில் என்ஐஏ சோதனை: 57 செல்போன், 68 சிம்கார்டு என முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: அரபிக் கடலில் மீன்பிடி படகில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அளித்த தகவலின்படி சென்னை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ், 2 லேப்டாப், வெளிநாடுகளுக்கு ரொக்க பணம் பரிவர்த்தனை செய்த ஆவணங்கள் சிக்கின.கடலோர பாதுகாப்பு படையினர்  2021ம் ஆண்டு ரோந்து சென்றபோது, லட்சத்தீவு அருகே  இந்திய கடல் எல்லைக்குள் நுைழந்த மீன்பிடி படகை சோதனை செய்தனர்.  அதில் 300 கிலோ ஹெராயின், 5 உயர் ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் இருந்தது.

இதை ெதாடர்ந்து படகில் இருந்த 6 பேரை திருவனந்தபுரம் என்ஐஏவிடம்  ஒப்படைத்தனர்.அவர்களின் விசாரணையில், விடுதலைப்புலி உளவு பிரிவை சேர்ந்த ் சற்குணம் (எ) சபேசன் (47) என்பவரும் ஒருவர். இவர், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம், போதைப்பொருட்கள் கடத்தி வந்தார்.  இதை தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் சற்குணம் உள்பட 6 பேர் மீது கைது செய்தனர்.என்ஐஏ விசாரணையில், சற்குணம் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடம் இருந்து  பறிமுதல் செய்யப்பட்ட செயற்கைகோள் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த கொழும்பை சேர்ந்த சுரேஷ் ராஜன் உள்ளிட்டோரிடம் பேசியது உறுதியானது. தொடர்ந்து, சுரேஷ் ராஜனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சற்குணம் தங்கி இருந்த வளசரவாக்கம் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி என்ஐஏ அதிகாரிகள் சென்னை மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீடு என 9 இடங்களிலும், திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என 11 இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நேற்று சோதனை நடந்தது.

 சோதனையில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கடத்தி வர ஏற்பாடுகள் மற்றும் அதை பதுக்குவது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக, 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ், ஒரு ஹார்ட் டிஸ்க், 2 லேப்டேப், 8 வைபை மோடம்கள், வெளிநாடுகளுக்கு ரொக்க பணம் பரிவர்த்தனை செய்த ஆவணங்கள், ஒரு இலங்கை பாஸ்போர்ட், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முக்கிய கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: