×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் மாணவ - மாணவிகள் சேர்க்கைக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆணையர் மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்தை அரசு பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ - மாணவிகள் சேர்க்கைக்கான பின்வரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது.

* ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவ - மாணவிகள் https:tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
* இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதியுள்ள நபர்களை மாவட்ட அளவிலான ஆலோசனை குழுவினை கூட்டி தேர்வு செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர் புதுப்பித்தல் விண்ணப்பித்தினை இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
* 4ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் 85 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் 10 சதவீதம், பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் என்ற விகிதத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
* பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.
* பெற்றோர்ஆண்டு வருமானம் ரூ.2,50,000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

Tags : Adi Dravidar ,Tribal ,Tamil Nadu , Adi Dravidar, Tribal Hostel, Admission,
× RELATED தேர்தல் பணியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை