உளவுத்துறை ஐ.ஜி.-யாக செந்தில்வேலன் நியமனம்.: ஒரு ஐ.ஜி மற்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 5 ஏ.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு.: தமிழக அரசு

சென்னை: உளவுத்துறை ஐ.ஜி.-யாக செந்தில்வேலனை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்பு உளவுத்துறை ஐ.ஜி. இருந்த, ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, தமிழகத்தில் உள்ள 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.பி.க்களாக இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்மிருதி, தீபக் சிவச், ஹரிஷ் சிங், சாய் பிரனீத் ஆகியோருக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.  

* மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமனம்,

* திருவல்லிக்கேணி ஆணையராக தேஷ்முக் சேகர் நியமனம்,

* சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம்,

* சீருடை தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்,

* காவல்துறை நவீனப்படுத்துதல் பிரிவில் காலியாக இருந்த பணியிடத்தில் உதவி ஐ.ஜி.யாக டி.கண்ணன் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories: