சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணியாற்றினால் ஒரு ஆண்டுக்கு ‘வொர்க் ப்ரம் ஹோம்’ : ஒன்றிய வர்த்தக அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய வர்த்தக அமைச்சகமானது வீட்டில் இருந்து பணிபுரியும் (வொர்க் ப்ரம் ஹோம்) விதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளை வகுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்,  ‘நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் ஒரே மாதிரியான ‘வொர்க் ப்ரம் ஹோம்’ கொள்கையை பின்பற்ற புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தொழில்துறையினரின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதியானது அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் உள்ள குறிப்பிட்ட வகை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறது.

இவர்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றுபவர்களும் அடங்குவர். மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை ‘வொர்க் ப்ரம் ஹோம்’ மூலம் பணியாற்றலாம். அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. அதன்பின் தொழில்துறையினரின் அனுமதியுடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துக் கொள்ளலாம்’ என்பது உள்ளிட்ட விதிமுறைள் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: