×

கொடைக்கானலில் மலைப் பூண்டுகளின் விலை சரிவால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புவிசார் குறியீடு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் மலைப் பூண்டியின் விலை சரிவிலேயே இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடைக்கானலை சுற்றிய பல்வேறு மலைக்கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பூண்டு பயிர் சாகுபடி செய்துள்ளனர். மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெற்று, 2 ஆண்டுகள் ஆகியும் மலைப்பூண்டுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மலைப்பூண்டு, இந்த ஆண்டு, 676 ஹெக்டர் அளவு பரப்பளவில் மட்டுமே நடவுசெய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். புவிசார் குறியீடு பெற்றதற்கு பிறகு, வெறும் 2 முறை மட்டுமே ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.600-ஐ தொட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலின் முக்கிய அடையாளமாக இருக்கக்கூடிய மலைப்பூண்டு விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலைப்பூண்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kodaikanal , Kodaikanal, mountain garlic, price fall, farmer, worried
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்