கடலூரில் பரபரப்பு... ஆசிரியர் தலைமுடி வெட்ட சொன்னதால் பூச்சி மருந்தை குடித்து மாணவன் தற்கொலைக்கு முயற்சி

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆசிரியர், தலை முடியை வெட்டி மாணவனை பள்ளிக்கு வரச் சொன்னதால், மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருத்தாச்சலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வந்த மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா, தலையில் முடி அதிகமாக இருப்பதால், அதனை வெட்டி விட்டு பள்ளிக்கு வருமாறு அறிவுரை கூறியதாக தெரிகிறது.

அதற்கு அந்த மாணவன் மறுப்பு தெரிவிக்கவே, பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவன், பள்ளியில் இருந்து வெளியேறி, நேராக கடைக்கு சென்று பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். பின்னர் மதிய வேளையில் பள்ளிக்கு வந்த மாணவன், சக மாணவரிடம், பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் உடடினயாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: