முடக்கு வாதத்தில் இருந்து மீண்டார் மேற்கத்திய இசை பாடகர் ஜஸ்டின் பீபர்: இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு!

ஒட்டாவா: முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கும் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். கனடாவை சேர்ந்த பிரபல மேற்கத்திய இசை பாடகர் ஜஸ்டின் பீபர் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வந்தார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அவருக்கு கடந்த ஜூன் மாதம் முகபக்குவாதம் ஏற்பட்டது. ஜஸ்டினின் முகத்தில் ஒரு பகுதி செயலிழந்ததால் உலகம் முழுவதும் அவருடைய இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஜஸ்டின் பீபர் விரைவில் குணமடைய உலகம் முழுவதும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தீவிர சிகிச்சை எதிரொலியாக ஜஸ்டின் பீபர் குணமடைந்துள்ளார்.

தற்போது தீவிர இசை பயிற்சி செய்து வரும் பீபர், இந்தியாவிலும் இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றி வருகிறார். வரும் அக்டோபர் மாதம்18-ம் தேதி இந்தியாவில் அவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் அவர் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது.

Related Stories: