×

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சோனா நெல் 75 கிலோ மூட்டை 1,726க்கு விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று சோனா ரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு அதிகபட்சமாக ₹1726 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று 5300 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் தற்போது நெல்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளில் ஏடிடி 37 வகை குண்டு நெல் குறைந்த பட்ச விலையாக ₹900க்கும், அதிகபட்ச விலையாக ₹1352க்கும், கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ₹769 க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹1157 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

606 வகை நெல்  குறைந்தபட்ச விலை ₹1061 க்கும், அதிகபட்ச விலையாக ₹1516 க்கும் சோனா நெல் வகை குறைந்தபட்ச விலை ₹1089 க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹1726 க்கும், ஐஆர்50 வகை நெல் ‌குறைந்தபட்ச விலையாக ₹1059க்கும், அதிகபட்சமான விலை ₹1121 க்கும், அன்னம் வகை நெல் ‌ குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ₹1386 க்கும், சூப்பர் பொன்னி நெல் வகை குறைந்தபட்ச விலையாக ₹710 க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹1127 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விவசாயிகள் அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து வரும் நெல் மூட்டைகள் தற்போது சற்று அதிகமாகி உள்ளது. மேற்கண்ட இந்த நெல் மூட்டைகள் அன்றன்றே விற்பனை செய்யப்பட்டு அன்றே விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் நெல் மூட்டைகள் அதிகளவில் எடுத்து வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நேற்று சோனா ரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டை ஒன்று அதிகபட்சமாக ₹1726 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தகவலை அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.

Tags : Sona ,Ammur Regulation Market , Ranipet: Sona variety of paddy per 75 kg bag yesterday at the Ammoor Regulation Hall next to Ranipet.
× RELATED மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை..!!