மதுரை, திண்டுக்கலில் ஐடி ரெய்டு : ஜெயபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை!!

மதுரை: மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. வரிஏய்ப்பு புகார் அடிப்படையில் மதுரையில் உள்ள பிரபல கட்டுமான தொழில் நிறுவனமான ஜெயபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனங்களில் அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவன உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் 12 பேர் கொண்ட அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையை நடத்தி வருகிறது.

மதுரையில் மட்டும் அவனியாபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேப்போல, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுக்குறிச்சியில் உள்ள முருகப்பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர் நிறுவனத்திலும் சோதனை தொடர்கிறது. இந்த நிறுவனம் நத்தம், துவரங்குறிச்சி நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த சீகம்பட்டி பகுதியில் உள்ள ஆர்.ஆர் நிறுவனத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories: