×

மண்டபம் அருகே வனத்துறையினரை தாக்கி 2 டன் கடல் அட்டைகளை பறித்து சென்ற கும்பல் : 20 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் : மண்டபம் அருகே வாகன சோதனையில் சிக்கிய 2 டன் கடல் அட்டைகளை, வனத்துறை அதிகாரிகளை தாக்கி பறித்து சென்ற 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல் பகுதியில் இருந்து நேற்று காலை வேதாளைக்கு கடல் அட்டைகள் வாகனத்தில் வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, மரைக்காயர்பட்டினம் சந்திப்பு பகுதியில் வனத்துறையினர், அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ய முயன்றபோது வாகனம் நிற்காமல் சென்றது. வாகனத்தை வனவர் அருண் பிரகாஷ் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் வேதாளை பகுதியில் தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர் வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு தப்பினார். அதிலிருந்த 2 டன் கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ய முயன்றபோது, 20க்கும் மேற்பட்டோர் வனத்துறையினரை சுற்றி வளைத்து தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வனப்பணியாளர்களை கீழே தள்ளி விட்டு, 2 டன் கடல் அட்டைகளுடன் வாகனத்தை எடுத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சாதிக் அலி, முகமது அலி உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வனவர் அருண்பிரகாஷ் போலீசில் புகாரளித்தார். இதன்படி மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்


Tags : Mandapam , Ramnathapuram, Vehicle inspection,Sea card
× RELATED சென்னை கிண்டியில் அமைந்துள்ள...