திருச்சி சிறையில் உள்ள சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்ப முயன்றவர்கள் உட்பட 140-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமில் அதிகாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட் மூலம் தப்ப முயன்றவர்கள் அதிகளவில் இருப்பதால் அவர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட திட்டமிட்டார்களா? அவர்களுக்கு போலி பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணை நடைபெறும் சிறப்பு முகாமை சுற்றி சிஆர்பிஎப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.         

Related Stories: