×

சென்னை மெரினா கடற்கரையில் கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பாக போராட்டங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை: போலீசார் பாதுகாப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பாக போராட்டங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையின் அடிபடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு  தொடர்பாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சென்னையில் மெரினா கடற்கரையில் இருக்கக்கூடிய காமராஜர் சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி தொடர்பாக மெரினா கடற்கரையில் யாரும் ஈடுபட கூடாது என்பதற்காக 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த பாதுகாப்பு ரோந்து பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக காமராஜர் சாலை,உழைப்பாளர் சிலை அதை போன்று நம்ம சென்னை, கலங்கரைவிளக்கம், கண்ணகி சிலை மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டங்களை போல கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு நடத்தலாம் என 2000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்த கருத்தானது பரவியிருந்த காரணமாக தமிழக காவல் டிஜிபி சார்பில் இருந்தும் அதை போன்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

நேற்று முதல் இந்த காவலர்கள்  குளத்திமரையில் 200-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடற்கரைப் பகுதிகளில் யாரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் கூட்டமாகவோ அல்லது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக திரிந்தாலோ அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகே அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கபடுகிறார்கள். இது போன்று முன்னேச்சரிக்கை நடவடிக்கையானது மேலும் கள்ளக்குறிச்சி விவகாரம் முடியும் வரை தொடரும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kolakkurichi ,Chennai ,Marina Beach , Precaution to prevent protest against Kallakurichi student at Chennai Marina beach: Police security
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...