×

அணைக்கரை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை தேடும் பணி தொடரும்: கும்பகோணத்தில் அரசு தலைமை கொடறா கோ.வி செழியன் தகவல்

தஞ்சாவூர்: கும்பகோணம் அணைக்கரை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்களை தேடும் பணி இருள் சூழ்ந்த காரணத்தினால் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மதகு சாலையை சேர்ந்த 4 இளைஞர்களில், மனோஜ், அப்பு, ஆகாஷ் ஆகிய 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி இருள் சூழ்ந்ததை அடுத்து, நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தலைமை கொடறா கோ.வி செழியன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடுகள் கணக்கிடப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார். இதனிடையே, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் சுமார் 1 லட்சம் கனஅடிக்கு மேல், கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சிதம்பரம் தாலுகாவில் சில கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், மக்கள் ஆற்றில் இறங்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      


Tags : Kodarara ,Co. ,Kumbakonam ,Sezheyan , Damakarai, Younger, Kumbakonam, Head of Government, Go.V Chezhian
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...