லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

வாஷிங்டன் : 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளன. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை அடுத்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2028ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜூலை 14ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இது 3வது முறையாகும். ஏற்கனவே 1932, 1984ம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: