ஸ்ரீதிரிபுராந்தக சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா: வரும் 22ம் தேதி தொடங்குகிறது

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதிரிபுராந்தக சுவாமி கோயிலில் வரும் 22ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதிரிபுராந்தக சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருகிற 22ம் தேதி காலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து 23ம் தேதி துர்கா, லஷ்மி, சரஸ்வதி ஆகியோர் பவழக்கால் சப்பரம் திரிபுரசுந்தரி அம்மன் பூதவாகனம், 24ம் தேதி மயில் வாகனம், 25ம் தேதி நாக வாகனம், 26ம் தேதி ரிஷப வாகனம், வீதி உலா நடைபெற உள்ளது.

மேலும் 28ம் தேதி காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி, துர்கா, லஷ்மி, சரஸ்வதி, பவழக்கால் சப்பரம் திரிபுர சுந்தரி அம்மன் ராவண வாகனத்தில் வீதி உலா, 29ம் தேதி குதிரை வாகனம், 30ம் தேதி காமதேனு வாகனம், 31ம் தேதி சிம்ம வாகனம் வீதி உலா வந்து ஆடிப்பூர விழா நடைபெற உள்ளது. இந்த ஆடிப்பூர விழாவின் கடைசி நாள் திருக்கல்யாண வைபவம், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. ஆடிப்பூர விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் டில்லிபாபு, செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: