இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம்

புதுடெல்லி: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இந்திய அணி வீரர்கள் நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்காக, ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றனர். முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. அதே களத்தில் ஜூலை 24 மற்றும் ஜூலை 27ல் அடுத்த போட்டிகள் நடக்கின்றன. டி20 தொடர் ஜூலை 29ம் தேதி தொடங்க உள்ளது. அதில் ரோகித் ஷர்மா தலைமையில் இந்தியா களமிறங்குகிறது.

Related Stories: