×

உச்சநீதிமன்றம் உத்தரவு நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை

புதுடெல்லி: நபிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்குகளில் நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைகாட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா பாஜ.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரை கடுமையாக விமர்சித்து மனுவை நிராகரித்தது.  

இதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி நுபுர் சர்மா தரப்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா அமர்வு, ஏற்கனவே பதிவான மற்றும் புதிய வழக்குகளில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், அனைத்து வழக்குகளையும் டெல்லியில் விசாரிப்பது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுத்த டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசு அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையும் அதே தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Tags : Supreme Court ,Nubur Sharma , Supreme Court orders interim stay on Nubur Sharma's arrest
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...